ஓரம் போனதேனோ

அன்பில் அன்னையாய்
ஆசையை நிறைவேற்றுவதில் தந்தையாய்
இம்சையில் தோழனாய்
ஈகையில் தமயனாய்
உறவுல் கணவனாய்
ஊக்கமளிப்பதில் குருவாய்
ஐந்து நிமிடம் கூட பிரிய மாட்டேன் என்று கூறி
ஒன்றாய் வாழ்வோம் என்றாயே....
ஓரம் போனதேனோ....இதற்கு நீ
ஔடதமே தந்திருக்கலாம் உன் கையாலே.....
கண்ணால் உனைக்கண்ட
மகிழ்ச்சியில்
மரணித்திருப்பேன் மனமாற....💝
உன் மடியினிலே....

எழுதியவர் : மீனாட்சி (30-Jan-17, 9:43 pm)
பார்வை : 152

மேலே