என்னை வதைக்கும் வஞ்சகா 😘

வெற்று காகிதம் நான்
வெகுளி சிரிப்பும் நான்
என்னை சீண்டுவதே _ உன் ஓரபார்வைகள் தான் ..

நேற்று பூத்தவள் நான்
நெகிழும் பாவையும் நான்
என் நெஞ்சில் நிரம்பியதே _ உன் கள்ளச்சிரிப்புகள் தான்..

பட்டாம்பூச்சியும் நான்
பளிங்கு பொம்பையும் நான்
நீ என்னை சீண்டியதும் _ என் சரிபாதியை தொலைத்தவள் தான் 💓

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (2-Feb-17, 2:42 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 104

மேலே