படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
வயலுக்குள் வீடு
வாசலில் தவமிருக்கும்
தென்றல் !
குடிசை வீடுதான்
குடியிருக்கின்றது
குதூகலம் !
யாராக இருந்தாலும்
தலை குனிந்தே நுழைய வேண்டும்
பயிற்றுவிப்பு பணிவு !
கைக்கு எட்டும் தூரத்தில்
சமைக்க உதவும்
காய்கள் !
மாட மாளிகையில்
இல்லாத இன்பம்
உண்டு குடிசையில் !