படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பார்க்க மகிழ்ச்சி
விழிகளுக்கு குளிர்ச்சி
மரங்களின் மலர்ச்சி !

தெரிகின்றது
மரங்களில்
தேவதை !

அறிந்திடுங்கள்
மரம் வளர்ப்பு
அறம் வளர்ப்பு !

மழைக்கான
வரவேற்பு தோரணங்கள்
மரங்கள் !

பாரக்கப் பசுமை
கண்களுக்குக் குளுமை
மனதிற்குள் மகிழ்ச்சி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (4-Feb-17, 2:47 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 85

மேலே