எனக்குள் பதிந்தவள்

அன்பே....! அழகே..!
என்னிளம் கண்ணே..!
உன்னூசிப்பார்வையால்
என் விழிப்பார்வையை
நீ பறித்துவிட்டாய்...
ஆனாலும் எனக்குள்
உன் உருவத்தை நீ பதித்துவிட்டாய்...

நான் இறந்தவுடன்
கண்தானம் செய்ய விரும்பினேன்...
உயிரோடு இருகும் போதே
என் கண்களைப் பறித்து
என்னை ஏன் குருடனாக்கினாய்...?

பெண்ணே...
என் கண்ணாய்...
இன்று நீ இருக்கும் போது
எனக்கென்ன கவலை...!

நீயெனக்கு இல்லையென்றால்தான்...
வாழ்வதிங்கு கடினம்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Feb-17, 9:04 pm)
பார்வை : 168

மேலே