போர்க்களம் அவனில் _ பூக்களம் நான்❤

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நிகழவே
நித்தம் சித்தம் உன் நினைவில்
நெஞ்சடைத்து போவேனோ ?!

பாதையின்றி பார்வையின்றி_ உன் பாதம் இரண்டும் நடக்கவே
பூ விழுந்து புல்முளைக்கும்
சோலையாக ஆவேனோ ?!


காதலின்றி கமாமின்றி கண்கள்
இரண்டும் மோதவே
நீ கண் சிமிட்டி புன்னகைத்தால்
போதையில் நான் வீழ்வேனோ?!

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (8-Feb-17, 12:16 am)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 111

மேலே