விடையில்லாத வினாக்கள் - புதுக்கவிதை
விடை தேட வேண்டிய ...நீ
வெறும் கேள்விக்கிண்ணத்திலேயே
விழுந்து கிடக்கிறாயே !!
உன்கால்களால் நீ
நடக்கும் வரை - உன்னை
பல்லக்குகள் பரிகாசம் தான் செய்யும்!!!!
விடையில்லாத வினாக்களாய்...!!!
நீஎழுந்து நின்றால்
எவரெஸ்ட் கூட
உன்இடுப்பளவு தான் .
என்ன உன்பார்வையில்
ஆச்சரியம் !!!!!
நீ - நிற்கப்போவது
நம்பிக்கை' என்ற
இமயமானால் ..........!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்