காதலர் தினம் 140217
காதலர் தினம் (14.02.17)
மனங்களின் முதிர்ச்சியில்
உருகும் காதல்
அறிவும் இதயமும் வரவேற்கும்
காதல்
தங்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்கும் காதல்
ஆரோக்யத்துடன் செழிக்கும் காதல்
பொழுது போக்காக வரும் காதல்
பொழுது முடிந்தால் மறையும் காதல்
நட்பாய் பழகி பின் மலரும் காதல்
நட்பிற்கே கலங்கத்தை வரவழைக்கும் காதல்
உள்ளம், உணர்வால் ததும்பும் காதல்
மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் போடும் காதல்
அறிவும், மனமும் பேசும் காதல்
ஆத்மார்த்தமாக எழுச்சி பெரும் காதல்
சுற்றத்தின் முன் நிமிறும் காதல்
வாழ்நாள் முழுதும் போற்றப்படும் காதல்
நட்பின் ஆதரவு உள்ள காதல்
கலகலப்காக என்றும் அலைபாயும் காதல்
காமத்தைப் பின்னுக்கு தள்ளும் காதல்
அட்டகாசமாக முன்னேறும் காதல்
வைராக்யத்தால் உண்டாகும் காதல்
முழுமையாக வெற்றி பெரும் காதல்
இன்னல்களை முறியடிக்கும் காதல்
அனுபவ முத்திரையை பதிக்கும் காதல்
தடைகளை தாண்டிவரும் காதல்
தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை தரும் காதல்
ஆனந்தமான காதல்
பின்னாளில் அசைபோட வைக்கும் காதல்
இதைப் படிக்கும் யாவரும் காதல் செய்வீர்
காதலைப் போற்றுவீர், காதல் வாழ்க
காதலர் தினமாம் இன்று.....
காதலர்களுக்கு எந்தன் வாழ்த்துக்கள்