கவிதை

எத்தனை
கவிதை எழுதிருப்பேன்!
என் கற்பனையினை
மிச்சம் சேர்த்து---- என்னைப்பற்றி
எனக்காக ஒரு கவிதை எழுத ஆசை!???
எதில் தொடங்குவது? எதில் முடிப்பது???
சாதனையை பற்றி எழுதவா?
காலை எழுந்து சமையல் செய்து பஸ்ஸை பிடித்து..
வேண்டாம் இது எனக்கு மட்டும் தான் சாதனை?!!
அழகு, அறிவு ???!!!அட- வேண்டாம் இது என்
கற்பனைக்கு சத்திய சோதனை...
சரி என்பெயரை கொண்டு
ஒரு கவிதை ??
என் பெயர் வைத்திருப்போர்
யாவும் மானநஸ்ட வழக்கு போட்டால்???
போதும் போதும்...
கடைசியாக முயற்சிப்போம்!
நானே ஒரு கவிதை நான் ஏன் எழுத வேண்டும் புது கவிதை?!!