சம்மதம் சொல்லும் உன் புன்னகை 555
உயிரே...
உன்னை கண்ட நாள்முதல் என்னுள்
பல கற்பனைகளை விதைத்தாய்...
உன்னை நினைத்து
கவிதை எழுத அல்ல...
உலகை நினைத்து எழுதவும்
கற்பனைகளை தந்தாய்...
மூங்கில் காட்டில் நானும்
ஒரு மூங்கில்தான்...
உன் விறல் பட்டு என்னை
புல்லாங்குழலாக்கினாய்...
உன் பார்வையெனும் உளிகொண்டு
என்னை செதுக்கினாய்...
உயிருள்ள சிற்பமானேன்
உன்மீது காதலும் கொண்டேன்...
கூழாங்கற்களும் வைரமாகும் என்பதை
உன் கூந்தலின் தழுவல் சொன்னது...
நீ சம்மதம் சொல்லி என்னை
கரையேற்றும் புன்னகைக்காக...
காத்திருக்கிறேன்
என் உயிரானவளே.....