இயற்கையை மதித்திடுவாய் மானிடனே
இயற்கையோடு இனைந்து வாழ்ந்த காலங்களில்
மனிதன் வாழ்வில் இன்பம் கண்டான்
மகிழ்ச்சியோடும் வாழ்ந்துவந்தான் -என்று
இயற்கை மீது அவன் அத்துமீறல்கள் துடங்கினவோ
இயற்கையும் சீற்றம் அடைந்தது இன்னும் இதை
அறிந்தும் அறியாமல் வாழ்ந்திடும் மனிதன்
தன்னையும் உலகையும் அழிவை நோக்கி
வேகமாய் இழுத்து செல்கின்றானே
இது என்ன விஷம விளையாட்டு
விழித்துக்கொள்ள மானிடனே -நமக்கு
வாழ்வு தரும் ஐம்பெரும் பூதங்களை,
அதுதான், இயற்கையை மதித்திடு
அதற்கெதிரான மறந்தும் போர்க்கோலம்
போட்டிடாதே அழிவைத் தேடிடாதே