பெண்ணாயிருத்தல்

முரட்டுத்தனமாய் மறுக்கிறேன்
இதுவும் சேர்ந்து தானே நான்?

காலம் கடந்துவிட்டது பெண்ணே
இதை இப்போதே செய்யவேண்டும் …

ஈயாய் கண்கள் எனை மொய்பதாய் படுகிறது
நாளையின் கேள்விகளை எதிர்கொள்ளல்
பயமுறுத்தியது…

நான் பெண்ணென்பதன் அடையாளமல்லவா?
இதுவற்றிருப்பதெப்படி…

என் முட்டாள் பெண்ணே, யார் சொன்னது
இது மட்டும்தான் பெண்மையின் அடையாளமென
கண்ணகி வேண்டாமென பிய்தெறிந்ததல்லவா?
தாடகை அறுத்தெறிந்ததுவும் கேட்டதில்லையா?
நீ தொடர்ந்து வாழ இதை செய்வது அவசியம்

நீங்கள் என்னை, இதை BRCA2வின் பாதிப்பாய்
ஒரு முதிர்வடைந்த நோய் பரவிய
செல்களாய்தானே பார்கிறீர்கள்
உங்களுக்கு
உணவுர்களை புரியவைப்பதெப்படி?


என்ன மருத்துவ உலகம்,
உறுப்பு மாற்றுசிகிச்சையில்இதையும் சேருங்கள்
யாரேனும் விபத்தில்சிக்கியவர்,
அல்லது இயற்கையெய்த காத்திருப்போரிடமிருந்தோ-தானமென
அல்லது
என் சேமிக்கப்பட்ட stemcell லிருந்தேனும்…செய்யுங்களேன்
எனக்கிந்த plastic வேண்டாம்..
அறுப்பதுதான் முடிவெனில்…

பெண்னே, அறுப்பதுதான் எம் முடிவு,
plastic தான் தற்போதைய தீர்வு
இருப்பதா,இறப்பதா- உனக்கேவிடுகிறேன்…



தீர்வுகளில்லா உலகில்
இருப்பதா இறப்பதா?
பெண்ணாயிருத்தல் … என்பது …
யாசிப்புக்கு அப்பாற்பட்டது…


நாளை அல்லது அதற்கு மறுநாள் நிகழப்போகும்
என் அடக்கத்திற்கான் குழி
இன்றே வெட்டப்படுகிறது…
மருத்துவம்
வெக்கித்தலைகுனிய…

எழுதியவர் : ரிஷி சேது (26-Feb-17, 7:02 pm)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 71

மேலே