எண்ணங்கள் எங்கங்கோ...?

விரைவாகச் சொல்லிவிடு
உனக்காய் விடியும் பொழுதை
என் வாழ்க்கை
முற்றாக இருளும் நாளை
இலகுவாக அறிந்து கொள்ள...

பேனா எழுதுகின்றதா
எனப் பார்ப்பதற்கு
என் பெயரைத்தானே எழுதுவாய்
மறந்தேனும்
திருமண அழைப்பிதழில்
என் பெயரை எழுதிவிடாதே.
மேட்டுநிலக் கள்ளிச்செடி
சபைக்கு உதவாது.

பட்டமரத்துக்கு பசளையிடுவதாய்
பரிதாபப் பேச்சு
வானத்து தாரகையைப்
பார்த்து ரசிப்பதே
தலையெழுத்தாச்சு

உதிர்ந்து போன முடியாக
என்னை உதறிவிட்டுச் செல்கின்றாய்
ஜோடி சேரும் சந்தோசத்தில்
ஏன்
சாகடித்து சொல்கின்றாய்..?

தூண்டில் கட்டிய மப்புலியாய்
மனம் சுண்டி சுண்டி இழுக்கின்றது,
சிக்கிக் கொண்ட மீனாக
உயிர் ஏதேதோ நினைக்கின்றது.

உன்னால்தான்
அறிந்து கொள்கின்றேன் மானே..!
புழுவுக்கு ஆசைப்பட்டுப் போகும் மீனுக்கு
தூண்டிலில் சிக்கிக் கொண்டால்
சோகம் தானென்று.
என் நிலையுமிதில் ஒன்று.

எழுதியவர் : கமல்ராஜ் (11-Jul-11, 8:09 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 797

மேலே