சுவர்க்கத்தில் காந்தி

கடவுள் : என்ன மஹாத்மாவே முகத்தில் ஏன் கவலை? இங்கு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதோ.?
காந்தி :: கடவுளே இங்கு குறையொன்றும் இல்லை! என் கவலைக்கு காரணம் பூலோக நினைவு வந்ததுதான்!
கடவுள் ::அப்படி என்ன பூலோக கவலை?
காந்தி ::அது வேறொன்றுமில்லை கடவுளே.. நான் வரும்போது மூன்றுவித குரங்குகளை அனாதையாய் விட்டு வந்தேன். இப்போது அவை என்னவானதோ என்ற கவலை மனதை வாட்டுகிறது.!
கடவுள் :: அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்.!
காந்தி ::ஏன்?
கடவுள் ::கண்ணை பொத்திய குரங்கெல்லாம் நீதிபதி ஆகிவிட்டது.! காதை பொத்திய குரங்கெல்லாம் ஆட்சியாளராய் மாறிவிட்டடது.! வாயை பொத்திய குரங்கெல்லாம் மக்களாய் வாழ்கிறது.!