விடியல்

சமுதாயத்தில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளதென்று ஐயம் தோன்ற பலரிடம் சென்று, " விடியல் என்றால் என்ன? ", என்னவென்று கேட்ட போது, அவரவர் வாழ்வின் பிரச்சனைகளை எடுத்துக் கூறி அவற்றிலிருந்து விடுதலை அடைவதே தங்களுடைய விடியல் என்றார்கள்..
இன்னும் சிலரோ சூரியன் வெளிப்பட்டும் படாமலும் இருக்கும் மங்கிய வெளிச்சமே விடியல் என்றார்கள்..

சமுதாயமென்றால் பிரச்சனைகளுக்குப் பஞ்சமில்லை..
அப்பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வுகள் காணப்பட்டு பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதே உண்மையில் விடியல் எனப்படுமே..

அவ்விடியல் எப்போது தோன்றுமென்றால் புதியதாக அறிமுகமில்லாமல் நம்மை நாடிவருபவரை நாம் நம்முடைய சகோதரராக ஏற்று அன்போடு அரவணைத்து ஒற்றுமையாக என்று வாழ்கிறோமோ அன்றே தோன்றும்..

கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளுக்குள் அண்ணனுக்கு தம்பி வாழ பொறுக்கவில்லை, தம்பிக்கு அண்ணன் வாழ பொறுக்கவில்லை,
இந்தக் காலத்தில் யாரோ அறிமுகம் இல்லாதவரை சகோதரராக ஏற்றும் அன்பு காட்டுவதும் சாத்தியமாகுமா?

அவ்வாறு சாத்தியமானால் மட்டுமே மனித சமுதாயத்தில் புதியதொரு விடியல் தோன்றும்...
அதுவரையில் பிரச்சனைகளுக்குத் நிரந்தரமான தீர்வுகளென்பதும் கனவாகவே அமையும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Mar-17, 6:41 pm)
Tanglish : vidiyal
பார்வை : 1593

மேலே