காதல் தூதுவிடும் கன்னி மனம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
127 ம் படைப்பு.......

காதல் கணவருக்கு காதலி விடும் தூது.......!

என்னை தீண்டும்
தென்றல் காற்றே....!
வா..... ! வா......! வா.....!

என்னை ரசிக்கும்
பிறை நிலவே....!
வா......! வா.....! வா.....!


ஒருமுறை வந்தால்
இதயத்தை கொடுப்பேன்..!
மறுமுறை என்றும்
உயிரை கொடுப்பேன்...!

முத்தம் ஒன்று கொடுத்தால்
முழுமனதை கொடுப்பேன்..!
பித்தம் ஒன்று பிடித்து
உன்னை ரசிப்பேன்......!
(எ)

உந்தன் அருகில் நான் இருப்பேன்..!
அடடா!
உந்தன் மடியில் நான் இறப்பேன்..!
அடடா!
இது என் பொல்லாத ஆசை..!
அடடா!
மவுனம் பேசும் புரியாத பாஸை..!
அடடா!

நான் கள்வனின் காதலி...!
அடடா! கவியே..!
என்னை கொஞ்சம் காதலி..!
அடடா!

இது கன்னி மனம் விடும் காதல் தூது....!
இந்த காதலுக்கு நிகரு
வேறு ஏது...!

கனவுகள் தோன்றி அட
வந்த காதல்..!
கன்னி மனம் இன்று
காதலில் மோதல்..!
(எ)

உன் அழகை நான் ரசிக்க...
என் அழகை நீ ரசிக்க...
நம் அழகை கவி ரசிக்க...
அடடா!
வாழ்க்கை பயணம் சிறக்கிறது...!
வாழும் காலம் இனிக்கிறது.....!

கவிதை ஒன்று மலர்கிறது...!
காதலை சொல்ல உன்னிடம் அழைக்கிறது.....!

உந்தன் முகம் காண தானே
எந்தன் விழிகள் தேடுதே....!
வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டு
காதல் ராகம் பாடுதே...!

கண் முன்னே கனவு வந்து
காதலோடு ஆடுதே....!
காதலை ஒருமுறை சொல்ல
காதல் கொண்ட கன்னி மனம் கள்வனை தேடுதே.....!

உன் மனம் இன்று புரிகிறது....!
என் காதல் இன்று
தெரிகிறது.....!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (5-Mar-17, 9:23 pm)
பார்வை : 105

மேலே