ரசிக்க லயிக்க மயங்க

பறக்க நினைத்தது பட்டாம்பூச்சி
பிடித்துக் கொண்டது சிறை
புகைப்படக்கருவி.
=====================================
சிறு முத்தம்
சலனம் ஏதுமில்லை
மலரைத்தொட்டு மயங்கிவிழுந்தது தூறல்..
=====================================
பழைய வானம்
புதிய கோலம்
வானவில்....
=====================================
கண் முன்னே கடவுள்
வாயடைத்துப் போனான் பக்தன்
திரும்பிச்சென்றது ஒரு வரம்..
=====================================
பள்ளியில் சேரவில்லை
பாடங்கள் படிக்கவில்லை
தவறாமல் போட்டார் ஓட்டு...
=====================================
பாதி உறக்கம்
மீதி மயக்கம்
காதலில் விழுந்தவன்...
=====================================
காரமும் அதிகம்
இனிப்பும் அதிகம்
புதிதாய் இனிப்பகம்...
=====================================