ஜல்லிக்கட்டு
எழுந்தன காளைகள்!
அதிர்ந்தது அலைகடல்!
இரத்தமின்றி ஒரு புரட்சி!
இளகாதோர்க்கோ மிரட்சி!
மீண்டெழுந்தது தமிழகம்!
மாண்டது அடிமையினம்!
அரியாசனம் சரியாசனமானது!
மலர்ந்தது மக்களாட்சி!
வாயில்லா ஜீவன்களால்
வாய்பூட்டுக்கு கிடைத்தது விடுதலை!
வாடிவாசல் காளையே வா!
வாட்டம் நீக்கி மகிழ்ச்சியைத் தா!