முத்தம்

இதழில் இசைக்கும்
உன் சத்தம்
கேட்பவரை உறையவைக்கும்
இசைப்பவரை உளறவைக்கும்
அன்னையின் முத்தம்
அன்பை அதிகரிக்கும்
தந்தையின் முத்தம்
தன்னம்பிக்கை கொடுக்கும்
மழலையின் முத்தம்
மனதை பறிக்கும்
மனம் பறித்தவனின் முத்தம்
புத்துயிர் கொடுக்கும்
விண் முதல் மண் வரை
உன் சத்தம்
ஒவ்வொரு உயிரிலும்
நடத்துகிறது
ஓர் யுத்தம் ...

எழுதியவர் : prisilla (9-Mar-17, 8:59 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : mutham
பார்வை : 110

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே