உண்மை சுடும் --- மரபு கவிதை
பெற்றெடுத்தத் தாய்தந்தை பேணாது நடுத்தெருவில்
பற்றற்று விட்டுவிட்டு பாசத்தை விலைபேச
மற்றற்ற சோகத்துடன் மனம்நொந்து பிச்சைகேட்க
உற்றவர்கள் மறந்துவிடும் உலகத்தில் வாழ்கின்றான் .
கண்ணீரும் கதைசொல்லும் காலமுமே பதில்சொல்லும்
உண்ணுதற்கு இவனுக்கோ உணவில்லை சமுதாயத்தில்
எண்ணங்கள் சிறப்பின்றி ஏழ்மையினை வளர்க்கின்றார்
மண்ணுலகில் நோக்கிடவும் மானிடருக்கு மனமில்லை !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்