உள்ளிருந்து ஒரு குரல்

உண்மையைச் சொன்னால் நம்மை எதிரியாக, துரோகியாகச் சுட்டிக்காட்டும் உலகில்,
எங்கும், யாவரிடமும் நிறைந்துள்ளது வெளியில் தெரியாத வரை எதுவுமே தவறில்லை என்ற எண்ணம்......

உடலில் தெம்பு இருக்கும் வரை ஆட்டம்....
தெம்பு இல்லாவிடில் எடுக்கும் ஓட்டம்....

பணத்தை அறுவடை செய்யுங்கள்...
பணத்தை நன்றாக அறுவடை செய்யுங்கள்.....
உணவில்லா வேளையில் பணத்தையே உண்ணுங்கள்......
உயிரோடு உடலை அறுத்து அறுத்து கூறுபோட்டு நரகம் காணுங்கள்......
எனது ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு.....

அவரவர் மனம் போல் அமையட்டும் வாழ்க்கை.....
அவ்வாழ்க்கையில் வழுக்கை விழுந்தால்??? என்னைக் கேட்கக் கூடாது...

மரணமென்னும் தூது வருகையில் செய்ததெல்லாம் தவறென உணரும் போது கண்ணீர்விட்டு கதறினால் செய்தது எதுவும் செய்யவில்லை என்றாகாது......

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (12-Mar-17, 10:46 am)
பார்வை : 485

மேலே