நட்பும் வலிகளும் - சகி

நட்பும் வலிகளும் - சகி

நண்பனே .....

கல்லூரி பருவத்தில்
நாம் இருவருமே
வெவ்வேறு துறைதான் ......

நட்பேனும் புனிதமான
துறையில் இருவருமே
இணைத்தோம் ......

அந்நாட்களை இக்கணம்
எண்ணினாலும் இதமான
வருடல் தான் நெஞ்சில் .....

பொய்மையில்லாத
உன் நட்பும் அன்பும்
நேர்மையான பார்வையும்
கள்ளமில்லா எண்ணங்களும்
எனக்கு உன்னில் பிடித்தவை .....

என் நல்விரும்பிகளில்
என் உண்மையான நட்பில்
நீயுமொருவன் ......

மறக்கவில்லையடா
என் நண்பனே நம்
நட்பின் அழகிய தருணங்களை ...

உன் வீட்டு உறவுகளின்
அன்பில் அடிமையாகி
போனேன் ...

மறக்கவில்லையடா

உன் உறவுகளின்
அன்பில் உணர்த்தேன்
அன்பை.....

வலிதானடா ..

உன்னை கண்டும்
காணாமல் சென்ற நொடிகளில்
வலி தானடா ......

யதார்த்தமான என் திரும்பலில்
பேருந்து பயணங்களில்
இன்றும் உன்னை காணாததுபோல் செல்வது
என்னில் தினம் தினம்
வலிதானடா ....

நலம் விசாரித்தோம்
சிறிய புன்னகையில் .....

நினைவுகள் இருப்பின்
பிரிவில்லை என்பதை
மறவாதே .....

காலங்கள் மாற
அனைத்தும் மாறுகிறது .....


Close (X)

15 (5)
  

புதிய படைப்புகள்

மேலே