வசந்தம்
வசந்தா உன் பெயரினில்
உள்ள வசந்தம் உன் வாழ்வினில்
இல்லையே?
நீ இல்லையேல் என் வாழ்வினில்
இல்லையே வசந்தம்...
ஆடையில் பூசிய
வாசனை திரவியம்
போல் ஆனதே நீ
வந்த நாள் முதல்...
கோணலாய் இருந்த என்
வாழ்க்கை எனும் பாதையை
நேராக மாற்றினாயே...
கரடு முரடாக இருந்த
என் வாழ்க்கையில்
களைகளை கலைந்தாயே...