காதல் வரவு

கண்ணை மூடி கனவில் பார்த்தேன்
கண்ணே நீயே தெரிகிறாய்....
விழி திறக்கும் வேளையில் அன்பே
விடியலாய் நீ வருகிறாய்...
இதுவரையில் காதல் கொள்ள
எண்ணவில்லை என்மனது...
அழகே... உன்னை நான் கண்டேன்
அந்த நொடியே காதல் கொண்டேன்...
மயிலிறகு வருடுதடி மனதில்
மானே மறைந்துன்னை பார்க்கயிலே....
நொடியில் உடல் சிலிர்க்குதடி
உன் பார்வை என்னில் பாய்ச்சயிலே...
பெயரெழுதி புத்தகத்தில்
பொக்கிசமாய் வைத்தேன்
உயிரோடு உயிலாக
உன்னை நான் தைத்தேன்....
அலைபேசி கீச்சிட்டால்
உன் பெயரே ஒலிக்குதடி...
கைபேசி கையோடு
ஓர் அங்கம் ஆனதடி...
அதிகம் அசை இல்லை!
ஆறேழு சென்மம் மட்டும்
உன்னோடு வாழ்ந்தால் போதும்....
உன் சுவாசக் காற்றுப் பட்டால்
உச்சந்தலையில் தென்றல் பாடும்...
இதழாலே இதயத்தை
உறிந்து நீ எடுத்திடு...
பதிலுக்குப் பக்குவமாய்
உன் நெஞ்சைக் கொடுத்திடு....
அன்போடு தேடி வரேன் அன்பே..
அதுவரையில்
ஆவலாய் காத்திரு
வாயிற்படி முன்பே...

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (15-Mar-17, 12:35 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : kaadhal varavu
பார்வை : 79

மேலே