படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
இருகைக்கான ஆசைதான்
பலரைத் தள்ளியது
சிறை இருளில் !
ஏறிவிட்டார்
இறங்குவது
கடினம் !
தேவையில்லை
ஒருமனிதனுக்கு
இவ்வளவு பெரிய இருக்கை !
போட்டி இல்லாததால்
அமர்ந்துள்ளார்
மகிழ்வாக !
வந்துவிட்டது
பிரமாண்டம்
இருக்கையிலும் !