நட்பின் வலிமை

நட்பின் வலிமை!
இதயம் நட்பை அழைக்கும்,
மதியம் விருந்தை கொடுக்கும்,
என்றும் அன்பு, நண்பரை சேர்க்கும்,
நல்ல பண்பு, நட்பை பெருக்கும்!
நானிருக்கேன் என்று, முன்வந்து நின்று,
யானையின் வலிமையை, மனதுக்கு தந்து,
வாசம் என்பது, பூக்களுக்கு மட்டுமா?
நேசம் என்னும், மனதுக்கும் உண்டு,
நீரை ஊற்றி, வளர்க்கும் செடி போல்,
பரிவை கொடுத்து, பாசத்தை வளர்க்கும்,

சிந்தித்து பார்த்து, செயல் உருவு தந்து,
இயற்கையும், செயற்கையும், கை கொடுக்க செய்து,
சிரிப்பொலியை சில்லறை போல், தூவி விடும்!
நண்பர்கள் கூடி, நாட்டையும் காக்கும்,
நட்புகள் கூடி, அரசையும் மாற்றும்,
அண்டத்தை கெடுக்கும், பிண்டத்தை புதைக்கும்,
புதியதோர் உலகம், பூமிக்கு கொடுக்கும்!


  • எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட்
  • நாள் : 17-Mar-17, 6:01 pm
  • சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
  • பார்வை : 637
Close (X)

0 (0)
  

மேலே