காதல்

நிலவொலியில்
உன்முகம்
கண்டேன்
முழுமதி எதுவென வியந்தேன்
நிலவு கூட உன் முகம்
கண்டு விலகி ஓடும்...

அழகிலே நிலவை
தோற்கடித்தாய்
காதலில் என்னை காணாமல்
செய்தாய்
நான் கட்டிய கூட்டில்
சிட்டு குருவியாய்...

வாழ்நாளில் உயிரின் ஓசை
உன்னில் காதலாய் ஓட
என்னில் மட்டும் நீங்காமல்
ஜென்ம ஜென்மாய் நீ
காதல் தொடர்வாய்...

எழுதியவர் : சிவசக்தி (18-Mar-17, 8:38 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : kaadhal
பார்வை : 138

மேலே