ஒரு நாள் கனவில்

கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தம்
மெண்மையான குரலில் கேட்டது.திரும்பி
பார்த்தேன் அழகிய இரு மீன் போன்ற கூர்மையான கண்கள் திகைத்து நின்றேன் அந்த கண்களைப் பார்த்து.
அந்த நொடியில் என் இதயத்தை வேருடன் பிடுங்கி எடுத்தார் போல் ஓர் உணர்வு. என் நினைவுகளை ஒன்றுபடுத்தி கோட்டையாகக் கட்டி
குடியேரினால் அந்த கண்களின் சொந்தக்காரி. அந்த கண்களின் சொந்தக்காரி என்னை நோக்கி வந்தாள்.
என் அருகில் வந்து என்னிடம் கொஞ்சம்
வழிவிடுங்கள் என்று கூறினாள்.
நனோ அந்த கண்களைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தேன். அவள்
சென்று விட்டாள்.
நானும் அந்த கண்களின் நினைவுகளுடன் மெல்ல நடந்தேன். என்
வீடு வந்தது.அந்த கண்களின் நினைப்பில் கட்டிலில் படுத்தேன்.
மறுபடியும் ஓர் சத்தம் கேட்டது.
எழுந்து வந்து பார்த்தேன் மழை பெய்து கொண்டிருந்தது.மீண்டும்
கட்டிலில் படுத்து கண்களை மூடினேன். மீண்டும் அதே கண்கள் வந்தது.அந்த கண்கள் மௌன மொழியில் ஏதோ கூறுகிறது.ஆனால் எனக்கோ அது புரியவில்லை.மீண்டும் எழுந்து வந்து
மழையை இரசித்துக் கொண்டிருந்தேன்.
மழை இலேசாக நிற்க தொடங்கியது.
மழை நின்ற பின்பும் சிறு தூரல். எனது கையை நீட்டினேன். சிறு மாணிக்க பரல்கள் போல் இரு கைகள் மீது இருந்தது மழைத்துளிகள்.அந்த துளிகளை உற்றுப் பார்த்தேன் மீண்டும் அதே கண்கள்.அக்கனம் இதமான ஈரக் காற்று மெல்ல வீசியது கண்மூடிய படி இரசித்து விழித்து மேலே வானத்தைப பார்த்தேன்.அழகான வண்ணமையமான வானவில் இருந்தது.அந்த இடத்தில் ஆச்சர்யம் என்னவென்றால் வானவில்லின் மேல் அதே இரு கண்கள்.
அந்த வானவில்லின் வர்ணத்தை விட
அந்த கண்களின் வர்ணங்கள் மிகவும் அழகாக காட்சியளிதத்து.
மழை முழுவதும் நின்ற பின் இரவு வந்தது.இனிமையான இரவு இதமான ஈரக்காற்றுக்கு நடுவில் அற்புதமான
நிலாவைப் பார்த்தேன்.அந்த நிலாவில் அதே கண்கள்.அந்த நேரத்தில் தோன்றியது என் இதயத்தில் ஓர் புதுவித வலி. மீண்டும் ஓர் சத்தம்
அது என் அம்மா கூப்பிட்டாள் சீக்கிரம் வந்து சாப்பிடுடா என்று.உனவு உண்ட பின் மீண்டும் போய் படுத்தேன் என் நினைவுகளில் அதே கண்கள்.அந்த கண்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
மீண்டும் ஓர் சத்தம் அம்மா கூப்பிட்டாள் விடிந்தது எழுந்தருடா என்றாள். எழுந்து
பார்த்தேன் மணி 6.25.வெளியே சென்று பார்த்தேன் சூரியன் உதயமானது.ஆனால் வாசலில் ஈரம் சிறு துளியும் இல்லை.செடிகளை பார்த்தேன்
வாடி கிடைந்தது.அப்போது தான் புரிந்தது இவை அனைத்தும் (அந்த கண்கள், மழை)கனவு என்று

எழுதியவர் : சக்திவேல் (18-Mar-17, 4:34 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : oru naal kanavil
பார்வை : 447

மேலே