நீ

என் விழியில் விழுந்த
முதல் ஓவியம் நீ!
என் இதயம் கலந்த
முதல் கவிதை நீ!
என் காதல் மாளிகையின்
இனிய தேவதை நீ!
என் வாழ்வில் நுழைந்த
இளந் தென்றல் நீ!
என் உள்ளத்தில் மலர்ந்த
பெருங்காவியம் நீ!
என் இல்லம் மிளிர
ஒளிவீசும் தீபம் நீ!

எழுதியவர் : லட்சுமி (18-Mar-17, 6:49 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : nee
பார்வை : 312

மேலே