வழி மட்டும் தாருங்கள்

தனயனாய் பிறந்து விட்டேன்
தாங்கித்தான் ஆகவேண்டும்
வழிகளை மறந்துவிட்டு
வாழ்ந்துதான் காட்டவேண்டும்
அமைதியாய் தூங்கு தம்பி
அம்மை அப்பன் நான்தான் இனி
எப்படியும் கரை சேர்ப்பன் உனை
என்னுடனே வாழ்ந்து விடு
நானும் தூங்கிவிட்டால்
நம்பிக்கை தொலைந்துவிடும்
இப்போதே புறப்படனும்
இரை தேட நானும்
தம்பி விழிததால்
வெம்பி அழுதிடுவான்
தனயன் என்னால்
தாங்க முடியாதே
அவன் தூக்கம் தொடர
வழி மட்டும் தாருங்கள்

எழுதியவர் : தே.பிரியன் (20-Mar-17, 10:52 am)
பார்வை : 82

மேலே