படித்ததில் ரசித்தது

படித்ததில் ரசித்தது

நீ
படிக்க
மனமின்றி
ஒதுக்க,

உன் வீட்டு
குப்பத்தொட்டியில்
குடியிருக்கிறது
என்
கவிதை....!

நீ
மார்போடு
அரவணைத்து
அழகுபார்த்த
துணிகளெல்லாம்,
என்வீட்டு
அலமாரியில்.....

ஆக
கற்று
கொண்டிருக்கிறேன்,

கவிதை
எழுதுவதை
நிறுத்திவிட்டு
புடவைநெய்ய......

நீ
படித்துவிட்டு
கிழித்துபோடும்
கவிதையைவிட,

உடுத்திவிட்டு
அவிழ்த்துபோடும்
புடவை
எவ்வளவோ
மேல்....!!!


Close (X)

8 (4)
  

மேலே