சிவா – ஹரி

அறிவியல் கதை

சிவா – ஹரி


சிவகுமாரனும், ஹரிச்சந்திரனும்; பள்ளி நாட்களில் இருந்தே உற்றான்மை நண்பர்கள். ஹரியின் தந்தை விஷ்ணுசந்திரன் ஒரு கணினிகள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். சிவகுமாரனின் தந்தை சிவலிங்கம் மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர். முப்பது அவர் நிறுவனத்தில் வேலை செய்தனர். அரச திணைக்களங்களுக்கும், வங்கிகளுக்கும் தேவையான மென் பொருள்களை உருவாக்கிக் கொடுப்பதும், வெப்பக்கஙகள் உருவாக்குவதும்; அவர்கள் நிறுவனத்தின் பொறுப்பு. விஷ்ணுசந்திரனும் சிவலிங்கமும்; பள்ளி நாட்கள் முதல் நல்ல நண்பர்கள். அவர்க்ளைப்போல் அவர்களின் மகன்கள் ஹரியும், சிவாவும் ஒரே பள்ளியில் படித்தப் பள்ளித் தோழர்கள். எப்போதும் அவர்கள் ஒன்றாகவே காணப்பட்டார்கள். அவர்களுக்கு; வேறு நண்பர்கள் அதிகம் இருக்கவில்லை. சிவாவுக்கு எப்போதும் ஹரியின் பாதுகாப்பு மேல் தனிப்பட்ட அக்கரை இருந்தது. எந்த மாணவனும் ஹரியோடு பகிடி பண்ணுவதோ அல்லது வாக்குவாதம் செய்வதோ சிவாவுக்குப் பிடியாது.

ஹரியின் தோற்றம் பெண்ணைப் போன்றது. மென்மையான குணம்.; அவனது நடை, மற்றும் குரல் பெண்போலவே இருந்தது. அதற்கு எதிர்மாறான தோற்றமும் குணமும்; உள்ளவன் சிவா. எப்போதும் மற்றைய மாணவர்களுடன் சண்டைக்குப் போவான். அவனிடம் ஒரு ஆணுக்குரிய தோற்றமும், குணங்களும் இருந்தன. அவர்கள் இருவரின் நட்பைக் கண்டு மற்றைய மாணவர்கள் கேலி செய்வதுண்டு. ஆனால் அதை அவர்கள் பெரிதாகக் கருதுவதில்லை. சில நாட்களில் ஹரி சிவா வீட்டிலும், சிவா ஹரியின் வீட்டிலும் இரவைக் களிப்புதுண்டு.
அவர்கள் விடுமுறை நாட்களைச் சுற்றுலாப் பயணம் ஒன்றாகச் சென்று களிப்பார்கள். இருவரும் கணினி துறையில் சிறந்து விளங்கினாரகள்;. அவர்களின் பெற்றோருக்குத், தங்களுக்கு வாரிசு வரவேண்டும் என்பதில் ஆர்வம் இருந்ததினால் இருவருக்கும் நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கவே விரும்பினார்கள்.

சிவாவின் தாய் மாமனின்; மகள் ரேவதி. அவளைச் சிவாவுக்கு திருமணம் செய்து வைக்க சிவலிங்கம்; விரும்பினாலும் சிவா அதை ஏற்கவில்லை. ரேவதிக்கு சிவா மேல் காதல். ஆனால் சிவா அவளைச் சகோதரியாகவே கருதினான். அத்தான், தன் காதலை ஏற்காததையிட்டு அவளுக்கு கவலை. தான் திருமணம் செய்வதானால் சிவாவைத் தான் கணவனாக அடைவேன் இல்லாவிட்டால திருமணமாகாத பெண்ணாகவே வாழ்வேன் என்று தன் பெற்றோருக்கு உறுதியாக ரேவதி சொல்லிவிட்டாள். அவர்களால் மேலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களுக்குத் தெரியும் சிவா, ஹரினது விசித்திரமான உறவு, ரேவதியின் திருமணத்துக்குத் தடையாக இருக்கிறது என்று. அந்த உறவு இறுதியில் எங்குபோய் முடியுமோ என்று கவலைபட்டனர். இனத்தவர்கள் அவர்கள் நட்பைப்பற்றி பல விதமாக பேசிகார்கள். “சிவலிங்கத்தாருக்கு வாரிசு கிடைத்த மாதிரி தான்” என்றாள் வயதுவந்த அவர் மாமியார்.

“அதென்ன ஆண் இன்னொரு ஆணை காதலிப்பது? இயற்கைக்கு விரோதமான செயல இது. நம் ஊரில் இது நடப்பதாக நான் கேள்விபடவில்லையே. சட்டம் அவர்களை தண்டித்து விடும். ஆனால் கனடாவில் இத்தகைய உறவுக்குச் சட்டத்தில் இடம் உண்டு” என்று குறைபட்டார் சிவலிங்கத்தின் மைத்துனரும், ரேவதியின தந்தையுமான மாதவன்.

ஹரிக்கும் சிவாவுக்கும் ஆண், பெண் திருமணத்தில் நம்பிக்கையும் துளி அளவும் அக்கரையும் இருக்கவில்லை. அவ்வளவுக்கு நெருங்கி வளர்ந்தது அவர்கள் உறவு. அவர்கள் இருவரும்; உள்ளூர், ஓரின சேர்க்கை சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஹரியும் சிவாவும்; வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் பட்டம் பெற்று, ஒரு பிரபல்யமான கொட்பியூட்டர் நிறுவம் ஒன்றில் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கவில்லை நிறுவனத்தில் வேலை செய்யும் போது அவர்கள் இருவரும் பழகிய விதம் உயர் அதிகாரிகளை சிந்திக்க வைத்தது. நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடுமோ என்பயம் உரிமையளர்களுக்கு. அவர்கள் இருவரையும்; கூப்பிட்டு எச்சரித்தும் அவர்கள் உறவில் மாற்றம் இருக்கவில்லை ஹரியும், சிவாவும் ஒரு வருடம் வேலை செய்த பின் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். காரணம் சொல்லப்;படவில்லை.

அதே நேரம் இருவரகளினது பெற்றோர்கள் இறந்ததினால் அவர்கள் நடத்திய வணிகங்களை பொறுப்பேற்க வேண்டிய நிலை சிவாவுக்கும,; ஹரிக்கும் ஏற்பட்டது. பெற்றோர் விட்டுச் சென்ற சொத்து, அவர்களை இரு வணிகங்களையும் இணைத்து சிவா, ஹரி பெயரில் கொமபியூட்டர்களையும், மெனபொருட்களையும் உற்பத்தி செய்யும் ஸ்தாபனத்தை உருவாக்க உதவியது. பணமும் வந்து குவியத் தொடங்கியது. இருவரும்; ஒரே பால் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். அதை தடுக்க இனத்தவர்கள் ஒருவராலும் முடியவில்லை

“சிவாஹரி” என்ற பெயரில் அவர்கள் வணிகம் செழித்து வளர்ந்தது. பிரம்டன், ஒட்டாவா ஆகிய இடங்களில் கிளைகள் ஆரம்பிக்பட்டது. அவர்கள் இருவர் மட்டுமே உரிமையாளர்கள.; நிறுவனத்தில வேலை செய்த சுமார் நூறு ஊழியர்களில், பலர் மென்பொருள் பொறியியலாளர்கள், மற்றும் கணனி பொருள் உற்பத்தியாளர்கள். அதோடு கணனிகளைத் திருத்துவதற்கு என ஒரு குழு இருந்தது. ஹரியும சிவாவும்; பில்லியனியர்கள் ஆனார்கள்;.

ஒரு கட்டத்தில் ஹரியும் சிவாவும்; திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தங்கள் நிறுவனத்தின் லோயரிடம் கனடாவில் ஓரின சேர்க்கை திருமணம் பற்றி ஆலோசனை கேட்டனர். அதற்கு வழக்கறிஞர் “2005 ஆண்டில்;, கனடா சிவில் திருமண சட்டம் நடைமுறைக்கு வந்ததால்; நாடு தழுவிய ஒரே பால் திருமணம் சட்டப்பூர்வமாக்கப பட்டது. உலகின் ஐரோப்பாவிற்கு வெளியே இதை அனுமதிக்கும் நான்காவது நாடானது கனடா. இருவரும் திருமணம் செய்வது சாத்தியம்”; என்று கூறினார்.

அவர்களுக்கு வழக்கறிஞர் கொடுத்த ஆலோசனையைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்தனர். அவர்கள் ஒரு இனச் செர்க்கை அங்கத்தினர்களைக் கொண்ட டொரன்டோவில் உள்ள ஒரேபால் “கே” (GAY) கிளப்புக்கு தேவையான நிதி உதவிகள் செய்தது மட்டுமன்றி அக் கிளப்பில் அங்கத்தினர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்களது திருமணத்துக்கு அந்த கிளப் அங்கத்தினர்கள் வந்திருந்து ஆசிரவதித்தனர். இனத்தவர்களில் ஒரு சிலரே திருமணத்துக்கு வந்திருந்தனர். இனத்தவர்கள் அனேகருககு; ஹரி, சிவாவின்; வித்தியாசமான உறவு பிடிக்கவில்லை. அதனால் சமூகத்தில் அவர்கள் திருமணம் பற்றி வதந்திகள் பரவ ஆரம்பித்தது. திருமணத்துக்கு ரேவதி சமூகம் தந்திருந்ததை சிவாவும் ஹரியும் எதிர்பார்க்கவில்லை. ரேவதியின் பெற்றோர் திருமணத்துக்கு அவளைப்; போக வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தும், ரேவதி கேட்கவில்லை. அவ்வளவுக்கு சிவா மேல் அவளுக்கு மரியாதையும், காதலும்.

ஹரியும,; சிவாவும் தாலி கட்டாமல் மோதிரங்கள் மாற்றிக் கொண்டனர். திருமணத்துக்குப்; பின் அவர்கள் தேனிலவுக்கு, கனடாவுக்கு முன்பே 2005 ஆம் ஆண்டில் ஒரே பால் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஸ்பெயின், தேசத்துககு போனார்கள்.
ஸ்பெயினில்; இருந்து கனடா திரும்பிய அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள பல சங்கரநாராயணன் கோயில்களுக்குச் சென்று தரசித்தனர். ஏன் அந்த கோவில்களை இருவரும் தேர்ந்தெடுத்தனர் என்பது உறவினர்களுக்குப் புரியாத புதிர். அதோடு அவர்கள் இருவரும் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்தார்கள். ;1977 ஆம் ஆண்டில், ஓரின சேர்கையாளர்கள் இரத்தானம் செய்வதற்கு இருந்த தடை 2016 யில், பாலியல் தொடர்பு கொண்ட ஆண்கள் இரத்தத் தானம் செய்ய அரசு அனுமதித்தது.

******

அகிலா ரேவதியின் சினேகிதி. அதோடு; வகுப்புத்தோழி. ஆதனால் ரேவதியை திருப்ததி படுத்த அவள் கேட்டதினால், அகிலாவை தங்கள் நிறுவனத்தில்; தங்களின் தனிப்பட்ட செயலாளராக சிவா ஹரியிள்; ஒப்புதலுடன் நியமித்தார்.

திருமணமான அகிலாவுக்கு இரு குழந்தைகள். ஒருவன் பையன். மற்றது பெண் . சில நாட்களில்; பிள்ளைகள் இருவரும் சிவாஹரி அலவலகத்துக்கு போவதுண்டு.; ஒரு நாள் அகிலா தன் பிள்ளைகள் இருவரையும் சிவாவுக்கும், ஹரிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்;. அவர்கள் இருவரும் தான் தன் குடும்பத்தின் வாரிசுள.; தனதும் தன கணவனதும்; பெற்றோரின் முதிசங்களும், தங்கள் சொத்துகளும்; பிள்ளைகள் இருவருக்குமே தாங்கள் இல்லாத காலத்தில் போய் சேரும் என்றாள் அகிலா. ஆதைத் தொடர்ந்து அவள், ஹரியையும் சிவாவையும் பார்த்து " நீங்கள் சம்பாதித்த செல்வத்துக்கும் உங்கள் பெற்றோரின் முதுசத்திற்கு யார் வாரிசான உரிமயாளர்கள்?; மூதாதையரின் மரபணு தொடர்ந்து நிலைக்க எதாவது ஒரு வழியை நீங்கள் செயல்படுத்த சிந்தித்த்Pர்;களா"? என்று கேள்வி கேட்டாள் அகிலா.

அக்கேள்விக்கு அவர்கள் இருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. இருவரையும் அகிலாவின் பல் கேள்விகள் அவர்களைச் சிந்திக் வைத்தது. அதிர்ச்சியடைந்தனர். ஹரியும் சிவாவும்; கலந்து பேசிய பின் தங்கள் இருவருடைய பெற்றோர் பரம்பரை நிலைக்க, வாரிசு அவசியம் என்பதை உணர்ந்தனர். வாரிசு இருந்தால் தாம் உழைத்த சொத்தை அவர்களது வாரிசின் பெயருக்கு உயில் எழுதி விடலாம் என்று முடிவு எடுத்தனர். தாங்கள் இருவரும்;; தம் வழக்கறிஞரோடும் குடும்ப வைத்தியர் டாக்டர் மொரிசனோடு;ம் அதைபற்றிப் பேசத் தீரமானித்தனர்;;.

டாக்டர் மொரிசன் “அவர்கள் இருவரும் செயற்கை முறையில் விந்து பரமாற்றம் செய்து குழந்தை உருவாக்குவதைச் சட்டம் அனுமதிக்கும்” என்றார்.; அவர்கள் விருப்பத்தை இரு வழிகளில் கையாளலாம்;. எந்த வழி விருப்பம் என்பதை அவரகளே முடிவு எடுக்கவேணடும்”, என்றார் டாக்டர்;

“; எங்களுக்குச் செயற்கை முறையில் வாரிசை உருவாக்க என்ன இரு வழிகள் உண்டு டாகடர்?” சிவா கேட்டான்.

“ஐவிஎஃப் (IVF–In Vitro Fertilization) எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை. ஒரு பெண்ணின் கருப்பையில இருந்து வெளிவரும் சினை முட்டையையும் ஆணின் விந்துவையும் உடலுக்கு வெளியே விட்ரோ எனப்புடும் "கண்ணாடி" பரசோதனை குழாயுக்குள் பெண்ணின கருவைப் போன்ற சூலலில் ஒன்றிணைத்து உயிரை தோற்றுவிப்து ஒரு முறை ஆகும். விந்தும் முட்டை சேர்ககையினால் உயிர் உருவாகியதும் ஒரு இரசாயன திரவகம் கரு சிதைந்து விடாமல் காக்கிறது. ஒரு உயிர் வளர்ச்சி சுமார் 2-6 நாட்களுக்குப்பின் பின்னர் வெற்றிகரமாக முட்டையை அளித்த பெண்ணின் கருப்பையுக்குள்ளோ அல்லது வேறு பெண்ணின் கருப்பையுக்குள்ளோ மாற்றப்படும். அநத பெண்ணின கருப்பையில் கரு வளர்ந்து சுமார் ஒன்பது மாதத்தில் குழந்தை பிறக்கிறது. இரண்டாவுது முறை முடடையையும் விந்துவையும் கண்ணாடி பரிசோதனைக் குழாயுக்குள் (Test Tube) சந்திக்க வைத்து உயிரைத் தோற்றுவிக்காமல் நேரடியாக ஆணின் விந்துவை ஊசி முலம் தேரந்தெடுத்த பெண்ணின் சினை முட்டையை கருப்பையுக்குள் சந்திக வைப்பது”, என்றார் டாக்டர்

“ அதுசரி டாக்டர் இந்த முறைகளின் வெற்றி விகிதம் எப்படி என்று ஹரி கேட்டான்.

"ஐவிஎஃப் முறையின் வெற்றி விகிதம், முட்டையை தானம் செய்யும்; பெண்ணின் வயது, மலட்டுத்தன்மை;, கருவின் நிலை, இனப்பெருக்க வரலாறு, மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றை பெருத்தது. ஐவிஎஃப முறையினால் இளம் வயதானவர்கள் கர்ப்பமாக அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் இருவரும் 35 வயதுககு குறைவாக இருப்பதால் இந்த முறை அதிக வெற்றியைத் தர வாயப்புண்டு. முன்பு கர்ப்பமாக இருந்த பெண்களின் முட்டையே உகந்தது. திருமணமாகத பெண்ணின் முட்டையையும் பாவிக்கலாம்;. 35 வயதுள்ள பெண்களும் ஆண்களும்; இந்த முறையினால் கருவுற அதிக வாயப்புண்டு. ஏற்கனவே கற்பமான பெண்கள் அதிகளவு அம்முறையால் வெற்றி பெற அதிக வாயப்புண்டு. அது சரி உங்கள் இருவருக்கும் இப்பொது வயதென்ன”? டாக்டர் கேட்டார்.

“எனக்கு முப்பது. ஹரிக்கு இருபத்தி எட்டு டாக்டர்” சிவா சொன்னார்;

“நீங்கள் இருவருக்கும்; இந்த முறை நல்ல வெற்றியைத் தரும் என நம்புகிறேன். ஐவிஎஃப் வெற்றி விகிதம்; ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விட கணிசமாக அளவு இன்று உயர்நது; உள்ளது. ஆனால…;;” என்றார் டாக்டர்.

“ஆனால் என்ன டாகடர்”? இருவரும் ஒருமித்து கேட்டார்கள்.

“உங்கள் வயதை ஒத்த, உங்கள் இனத்தவர்களில் ஒரு பெண் இருந்தால் மிக நல்லது. உங்களுக்குத்தான் சகோதரங்கள் இல்லையே. யாரையாவது ஒரு பெண்ணை மனதில வைத்திருக்கிறீர்களா”?, டாக்டர் கேட்டார்.

ஹரி பதிலை சிவாவிடம் இருந்து ஏதிர்பார்த்தான்.

“எங்களைப்போன்ற ஒரே ஆண் பால் தம்பதிகளுக்கு எந்த முறை உகந்தது டாக்டர்”?

“ ஒரே ஆணபால் தமபதிகளுக்கு தேiயானது சினைமுட்டை தரும் ஒரு பெண்.ணும் அதோடு தன் கருக்குப் பையுக்குள் கருவை வளரக்கும அப்பெண்ணின்; சமமதமும். அவள் கருவளரும் வாடகைத் தாயாகிறாள். முடடையை தரும் பெண்ணும், கருவை கருப்பையுக்குள் வளர்க்கும பெண் வௌவேறாக இல்லாமல ஒரே பெண்ணாகவும், அதுவம் இனத்தவர்களில ஒரு பெண்ணாக இருந்தால மிக் நல்லது” டாக்டர் சொனனார்.

“டாக்டர் என்மனதில் ஒரு திருமணமாகாத என் மாமன் மகள் ஒருவள் இருக்கிறாள்; அவளுக்கு வயது 28. அவளைக் கேட்டுப்பார்க்கிறேன் சில நாட்கள் எனக்குத் தரவும் என்றான் சிவா. அவனுக்குத் தெரியும் தான்ன கேட்டால், ரேவதி வாடகைத் தாயாக மறுக்க மாட்டாள் என்று. எனது விந்து தனது கருப்பையுக்குள் தன் முட்டையோடு இணைந்து வளருவதை அவன் மகிழச்சியோடு ஏற்றுக்கொள்வாள். தாலி கட்டித் திருமணம் செயாவிட்டாலும் ஒருவிதத்தால் சிவாவின் விந்துவில் குழந்தை அவளது கருப்பையில் வளர்வதை ரேவதி என் மேல் உள்ள காதல் நிமித்தம் ஏற்றுக்கொள்ளலாம்” என்றான் சிவா டாக்டரிடம்

" எதற்கும் சட்ட சிகல்கள் ஏற்படாமல் இருக்க விந்தை கொடுப்பவருக்கும் சினை முட்டை வழங்கிய வாடகைத் தாயுடனும் இனப்பெருக்க சட்டம் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் ஒருவர் மூலம் தாயாரிப்பது நல்லது. அதுவல்லாமல் வாடகைத் தாயையும் விந்தைக் கொடுர்பவரையும் பரிசோதனை செய்வது அவசியம்." என்றார் டாகடர்

கர்ப்பத்தில் ரேவதியின் முட்டையைப் பாவித்து முதலில் சிவாவின் விநதுவை: அவளது கருப்பையுக்குள் வெலுத்தி இணையவைத்து குழநதையை உருவாக்க டதடர் உதவினார். அக்குழந்தைக்கு அர்ஜுனா என்ற சிவா பெரிட்டான்.

ஹரிக்கும் தானும் ஒரு குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என்ற ஆசை உருவாகியது. சிவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். ரேவதி, ஹரியின் விந்துவுக்கும் வாடகைத் தாயக செயற்படுவாளோ என்பது சிவாவுக்கு சந்தேகம். அவளிடம் கேட்கவும் சிவாவுக்கு விருப்பமில்லை. ரேவதியிடம்; ஹரியின் விருப்பத்தை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று கேட்டான்.
“ஒரே ஒரு வழிதான் உண்டு சிவா. பணம் கொஞ்சம் செலவாகும். நீஙகள் இருவரும் தான பில்லியனியர்கள் தானே. பணம் உங்களுக்குப் பெரிதல்லலவே”

“ வழியைச் சொல்லு ரேவதி. எவ்வளவு பணம் செலவானாலம் நாங்கள் செலவு செய்யத் தயரர” சிவா சொன்னான்..

“ அகிலாவுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது”

“ அவளுக்கு என்ன பிரச்சனை’?

“ அளுடைய கணவனுக்கு கிட்னி டிரானஸ்பிளானட செயதாக வேண்டும்; கனடவில் உடனடியாக செய்யமுடியாது. அதுவல்லாமல் கிட்;னியை தானமாக கொடுக்க எவரும் முன்வரமாட்டாரகள். ஆதனாலை..”

“ அதனாலை இந்தியாவிலை போய் பணம் கொடுத்து கிட்டினி தானம் பெற்று ஒப்பிரெசன் செய்ய நினைத்திருக்கிறாளா? அதை அவள் எனக்குச் சொல்லவிலலையே?

“ சிவா அதுக்கு தேவையான பணத்தை நீங்கள் கொடுத்தால் ஒரு வேளை அவள் பிரதி உபகாரமாக ஹரியின் விந்துவுக்கு வாடகைத் தாயாக செயற்பட சம்மதிக்கலாம்”

“நல்லயோசனை ரேவதி. அவளும் எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகிவிடுவாள்” சிவா மகிழ்ச்சியோடு சொன்னான். ஹரியும் அந்தத் திட்டத்துக்கு சம்மதித்தான்.

ரேவதி அகிலாவோடும், அவளின் கணவனோடும் பேசி அவர்களை அந்தத் திட்டத்துக்கு சம்மதிக்க வைத்தாள். ஆகிலாவின் கணவனின் முழு ஒப்பிரேசன் செலவையும், இந்தியா குடும்பமாய் போய்வரும் செலவையும், சிவாவும் ஹரியும் ஏற்பதாகச் சொன்னாள். அந்தத் திட்டத்துக்கு அகிலாவும் கணவனும் சம்மதித்தனர். ஹரியின் விந்துவுக்கு அகிலா வாடகைத் தாயாகத் தயாரானாள்;.

ஆகிலாவின் கணவன் இந்தியாசென்று வெற்றிகரமாக சிறுநீரக மாற்று ஒப்பிரேசன் செய்து, கனடா திரும்பிய பின் அகிலா சம்மதித்தபடி வாடகைத் தாயானாள். அகிலாவின் சினைமுட்டை ஹரியின் விந்துவும் சேர்நடது அகிலாவின் கருப்பையில் கருவுற்ற வளர்ந்து பிறந்த குழந்தைக்கு சிக்கந்தன் ( Sikandan என ஹரியும் சிவாவும் பெயரிட்டனர்.

இரண்டு சிறுவர்கள் வளர்ந்து போது அவர்கள் தங்கள் ஏற்று பெற்றோர்கள் நெருங்;கிப்; பழகுவதை அவதானித்தார்கள்;. அவர்கள் இருவரும் அதே மாதிரி நெருங்;கி பழகத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இடையே ஒரு ஓரின சேர்க்கை நெருக்கம் உருவாகியது. தாம் சகோதரர்கள் என்பதையும் தம் தந்தையார் என்பதையும்;,; தாம் உருவாகிய விதத்தையும் அறியாமல் அவர்களிடையே ஓரே பால் நட்பு வளர்ந்தது. வரலாறு மீண்டும் மீண்டும் திரும்புகிறதா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்;தபோது இந்த ஒரே பால் சேரக்கையோடு தொடர்புள்ள குணாதிசியம் ஹரி மற்றும் சிவா பெற்றோர்களின் மரபணுவில் உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.

******

(யாவும் கற்பனையே)

எழுதியவர் : (பொன் குலேந்திரன் -கனடா ) (22-Mar-17, 8:01 am)
பார்வை : 4027

மேலே