மழை வர போகுதே

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்
ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவர் சொல்லி கேட்பேன்
ஓ கடல் போன்ற கண்ணாலே
என்னை வாரி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்

மழை வர போகுதே துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்

எழுதியவர் : தாமரை (22-Mar-17, 12:37 pm)
Tanglish : mazhai vara poguthe
பார்வை : 154

மேலே