ஏய் உன்னைத்தான்

ரோஜா ஒன்று
எழுந்து வந்தது
அருகில் நின்ற
என் ஆரணங்கைச் சொன்னது
ஏய் உன்னைத்தான்
கவிஞர் யாவரும்
அழகு கூற
உவமேயம் கொள்ளவது
என்னைத்தான்
என்னைக்கு கொய்து
உன்னில் சூடிக் கொள்
உன்னில் நான்
மையல் கொண்டேன்
என் எண்ணம்
ஏற்றுக் கொள் என்றது
பின்பு மனுவும் உடனே
தாக்கல்செய்யச் சொன்னது
இனி ரோஜா வர்ணனை
செய்வோர்க்கெல்லாம்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (23-Mar-17, 1:43 pm)
Tanglish : EI unnaithaan
பார்வை : 193

மேலே