பணம்கொண்டு வாங்கமுடியா அரும்பொருட்கள்
பெருந்தனம் கொண்டு வாங்கிடலாம்
எதை எதையோ ஆனால் ஒருபோதும்
அந்த தனத்தாலும் பெறமுடியாது தாரணியில்
தாய் என்ற பெருந்தகையும்
அவள்தரும் பாசம் மற்றும் நல்ல நண்பன்
அவன் கொண்டுதரும் நட்பெனும் நெல்லிக்கனி