கண் தானம்
சூரியன் போலும் விழி கொண்டோம்!
பார்வை இழந்தோர் விழி நிலவிற்கு
எழிலாம் பார்வை ஒளியூட்டி
நாம் மறைந்த பின்னும்
நம் கண்ணொளியை
பாரில் பரவச் செய்திடலாம்!
பாவை போலும் விழி கொண்டோம்!
பிறிதோர் விழி வீடு சென்றிட்டும்
பார்வை தீபம் ஏற்றிடவே
பாங்காய் வழி செய்திடலாம்!
முத்தே போலும் விழி கொண்டோம்!
சிப்பி நமக்குப் பின்னாலே
மற்றோர் வதனம் அழகூட்டும்
முறையை நாடி செய்திடலாம்!
அகராதி போலும் விழி கொண்டோம்!
சொல்லது அறிந்து
பொருளது அறியாது
தவிப்போர் பயன் பெற்றிடவே
தகுந்த வழி செய்திடலாம்!
கருகி நீறாகப் போகும் தன்மைத்தாய்
கருவிழி இரண்டு நாம் கொண்டோம்!
நம் அன்பெனும் அழுத்தம்
அவை இரண்டை
பார்வையற்றோர் முகம் சேர்த்து
வைரமாய் மின்ன வழி செய்திடலாம்!
கண்தானம் என்பது
நம் இறுதிச் சடங்கொடு
ஒரு சடங்காகட்டும்!
நம் கருவிழி மதிப்பு
நாம் பிணமான பின்னும்
பன் மடங்காகட்டும்!