வரிகள் இல்லா பாடலே

வரிகள் இல்லா பாடலே
வார்த்தை இல்லா கவிதையே
காதல் வீசும் பார்வையால்
யாவும் இன்பம் ஆகுமே……………………

உலகின் சிறந்த வார்த்தை கொண்டு
எந்தன் காதல் சொல்லுவேன்…..
இன்பம் அள்ளி கையில் தந்து
முத்தமிட்டு கொஞ்சுவேன்………..

உன்னை கையில் ஏந்தி கொண்டு
வானம் சுற்றி காட்டுவேன்…….
நித்தம் நித்தம் நீ சிரிக்க
எந்தன் கையில் பூட்டுவேன்…...

கடலாக நீ மாற
அலையாக மாட்டேனா……….
நிலவாக நீ மாற
இரவாக மாட்டேனா…………..

கனிவான வார்த்தைகளால்
காதலாகி போனேனெ…….
அன்பாக நீ பேச
அடிமையாகி போவேனெ………..

இதயத்தின் இசையென நீயும்………..
காதலின் மொழியென நானும்………
காலமெல்லாம் சேர்ந்தே இருப்போம்
உயிரே………………….

அப்புடியே comment பண்னீங்க-னா நான் happy…………….

எழுதியவர் : அதார் உதார் விக்கி (27-Mar-17, 8:37 pm)
Tanglish : varigal illaa badle
பார்வை : 109

மேலே