தூக்கு கயிறு இலவசம்
அரை நிர்வாணத்தில்
தலைநகரில் விவசாயிகள்
தொடர் போராட்டம்
வெட்கமின்றி வேடிக்கை பார்க்கும்
மத்திய மாநில அரசுகள்
வாக்களித்தவர்களே
போராடிதான்
உரிமைகளை பெற வேண்டுமெனில்
எதற்காக ஆட்சியும்
பதவியும்
எங்களுக்காக குரல்
கொடுக்க வக்கற்றவர்களே
தயவு செய்து
பதவியை ராஜிணாமா
செய்யுங்கள்
ஒரு வேலை
பதவி ஆசை கண்ணை மறைத்தால்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளுங்கள்
இனியாவது எங்களுக்கானவர்களை
நாங்களே தேர்வு செய்து கொள்கிறோம்
மானமுள்ள மந்திரிகள் மட்டும்
பெற்று கொள்க
இங்கே
தூக்கு கயிறு இலவசம்