வாழ்க்கை சிறப்புற வேண்டும்

வெற்றியில் மயங்காத உள்ளம் வேண்டும்!

தோல்வியில் துவளாத நெஞ்சம் வேண்டும்!

ஆடம்பரத்தை விரும்பாத ஆசை வேண்டும்!

குடிசையில் வாழ்ந்தாலும் நிம்மதி வேண்டும்!

எவ்விடம் சென்றாலும் தன்மானம் வேண்டும்!

கூட்டிற்க்குள் வாழ்ந்தாலும் தன்னம்பிக்கை வேண்டும்!

இளமையில் அரிய விவேகமும் வேண்டும்!

முதுமையில் சீறிய வேகமும் வேண்டும்!

அன்பை கொட்டிட அனைவரும் வேண்டும்!

கோபத்தை காட்டிட வரைமுறை வேண்டும்!

ஆண்-பெண் வேற்றுமை ஒழிதல் வேண்டும்!

அனைவரும் சமமாக வாழ்தல் வேண்டும்!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (30-Mar-17, 10:39 am)
பார்வை : 131

மேலே