என் நாட்குறிப்பில்
அதிகாலை ஆறு
இயந்திரக் குயில் கூவ
விழித்தெழுந்து
ரொட்டியுடன் சுவையூட்டிய வெண்ணையில் பற்கள் பதித்து
உதட்டுச் சாயம் கலையாமல்
வயிறு நனைத்து
நீலமும் பச்சையும் செழித்த
உடைக்கு பச்சைக் கற்கம்மல்
கண்களுக்குக் கோடிட்டு
பூப் போட்ட பொருந்திய காலணிகள்
அவசரமாய் சரி பார்த்து
சரியாய் ஒன்பதிற்கு
அடையாள அட்டை தோய்த்து
ஒப்பனை கலையாமல்
அப்படியே நின்று
திரும்பினால் அழகாய் உள்ளதென்று
மனம் இறங்கி
மறு வார்த்தை பேசாமல்
வகுப்பறை பாடத்திற்குள் நுழைந்து
அறுபது மனதை படித்து
வெளி வருகையில்
அளவிடும் பார்வைகளுக்கு
அலட்டலாய் நிமிர்ந்து
மாலை மயங்கி
சற்று வேகம் கொண்டு
வீடு வந்து சேர்ந்தபோது
பேறு கால கவிதைகள்
ஒத்தி வைக்கப்பட்டிருந்தன!