ஆதரவு தா இறைவா

சொந்தபந்தம் யாருமில்லை சோகத்தில் மக்களில்லை
இந்தமண்ணில் எங்களுக்கு இரங்குவார் யாருமில்லை
நொந்துமனம் வாடுகின்றோம் நூலறுந்த பட்டம்போல்
அந்திசாயும் வேளையிது ஆதரவுதா இறைவா

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (30-Mar-17, 11:02 am)
பார்வை : 110

மேலே