வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும்

வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும்....

பல கவிகள் கிறுக்கியும் உன் விழி சொல்லும் கவியில் சொக்கிப் போனேனடி...
காதலைக் கொள்ளையடிக்க இதயச்சிறையினுள் நானும் கள்வனாய் நுழைந்தேனடி....

மலர்களும் மௌனமாகிப் போனதடி மலரிதழ்களைக் கண்டதும்...
என் உள்ளமும் ஊமையாகிப் போனதடி
துளைக்கும் உன் பார்வைகளைக் கண்டதும்....

சுவாசம் எங்கும் வாசம் வீசச் செய்தாயடி...
பெண் வாசனை அறியாத எனக்குள் கலவரம் நிகழ்த்திச் சென்றாயடி...
காந்தம் போல் கவர்ந்தென்னை கனவுலகம் அழைத்துச் சென்றாயடி...

கன்னங்கள் சூடேறுதடி கைவிரல் என்னைத் தீண்டையிலே...
இருதயம் வேகமாய் துடிக்குதடி நீ அருகில் நெருங்கி வருகையிலே...

நாணம் கொள்ளும் நேரங்களில் புதிதாய் நானும் பிறந்தேனடி...
எனைக் கண்டதும் மலரும் கன்னச்சிவப்பின் கதைகளில் வெட்கம் உன்னிடத்தில் வெட்கம் கொள்ளுதடி..

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (31-Mar-17, 8:57 am)
பார்வை : 704

மேலே