காவியச் சந்தங்களால்
இமை தழுவும் தென்றலுக்கு
இலக்கியம் எழுதத் தெரியுமா ?
மென்மை இமை தரும்
சுகம் மட்டுமே தெரியும் !
இமை மூடி இமை திறக்கும்
உன் கண்களுக்கு
காவிய வரிகள் எழுத
எனக்குத் தெரியும் !
இதழ் பிரித்து "ஆம்" என்று
புன்னகைக் கோடிட்டு காட்டிவிடு
இதோ இந்தக் கணினி ஏட்டிலே
இந்த எழுத்திலே எழுத்தாணி கொண்டு
காவியச் சந்தங்களால்
நிறுவிக் காட்டுகிறேன் !
----கவின் சாரலன்
கணினி எழுத்தாணி = தட்டச்சு