இயற்கையின் மோகம்

மண்ணில் விழுந்து மறைந்து போகும்
மழை நீரை போல
உன் அன்பும் என் மீது விழ
அதை நானும் நுகரலாம் என நினைக்க
மழை நீர் போல
உன் அன்பும் நிற்காமல்
ஓடி ஒழிந்ததடி !
இயற்கைக்கும் மழைநீரை போல ஒரு உறவும் இல்லை
அது போல அன்பே
உன் அன்புக்கு நிகரான உறவு இல்லையே

இயற்கை மீது மழை காதல் கொண்டால்
இயற்க்கை வலிமை அடைந்து
அதன் வறுமை நீங்கி செழிப்படையும்
பெண்ணே நீயும் என் மீது காதல் கொண்டால்
என் வாழ்வின் அன்பு எனும் வறுமை நீங்கி
வாழ்வும் வலிமை கொண்டு
வாழ்வு சிறந்திடும்

எழுதியவர் : கலையடி அகிலன் (31-Mar-17, 10:15 am)
Tanglish : iyarkaiyin mogam
பார்வை : 100

மேலே