உயிர்த்தமிழ் பிம்பங்கள்
எத்தனை எத்தனை இன்னல்கள்
அத்தனையும் கடத்திடும் இன்பங்கள்
எத்தனை எத்தனை தோல்விகள்
அத்தனையும் அடிவகுக்கும் வெற்றிகள்
எத்தனை எத்தனை எத்தர்கள்
அத்தனையும் முறித்திடும் யுக்தர்கள்
எத்தனை எத்தனை பித்தர்கள்
அத்தனையும் தெளிவிக்கும் சித்தர்கள்
எத்தனை எத்தனை உறவுகள்
அத்தனையும் அன்பாலான வரவுகள்
எத்தனை எத்தனை துறவுகள்
அத்தனையும் ஞானத்தின் திறவுகள்
எத்தனை எத்தனை போதைகள்
அத்தனையும் புகுத்திடும் உபாதைகள்
எத்தனை எத்தனை பேதைகள்
அத்தனையும் வழிமறுத்த பாதைகள்
எத்தனை எத்தனை உந்தங்கள்
அத்தனையும் முயற்சியின் பந்தங்கள்
எத்தனை எத்தனை சுகதாகங்கள்
அத்தனையும் தணித்திடும் சுயபோகங்கள்
எத்தனை எத்தனை கீர்த்தனைகள்
அத்தனையும் அர்ச்சனை ராகங்கள்
எத்தனை எத்தனை பாவங்கள்
அத்தனையும் பொங்கிடும் அபிநயங்கள்
எத்தனை எத்தனை உள்ளுணர்வுகள்
அத்தனையும் கவிதைக்குள் சங்கமங்கள்
எத்தனை எத்தனை கவிசந்தங்கள்
அத்தனையும் உயிர்த்தமிழ் பிம்பங்கள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி