ஓட்டு

ஓட்டு
==================================ருத்ரா

இது வெறும் அரிப்பு.
ஒரு நோய்க்கு இன்னொரு
நோயை மருந்தாகக்கொடுத்து
விளையாடிக்கொண்டிருப்பது.
இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன் கண்டுபிடித்த‌
மக்களாட்சி சித்தாந்தம்.
இப்போது
மக்கள் வேறு
ஆட்சி வேறு
என்று ஆகிப்போன சித்தாந்தம்.
எல்லோரும்
இந்த செங்கோலைப் பிடித்துக்கொள்ளலாம்
வாருங்கள்
என்று தான் அழைக்கிறார்கள்.
அருகில் போகும்போதுதான்
தெரிந்து கொள்கிறார்கள்
செங்கோல் எங்கும் இல்லை என்று.
இருப்பினும்
மாமூல் விளையாட்டு இது.
இனிமேல்
"ஒலிம்பிக் விளையாட்டுப்பட்டியலிலும்"
இது இடம் பெறலாம்.
தினமும் மின் பொறி பட்டனை
தட்டி தட்டி
பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு தட்டலில்
எல்லோருக்கும் ஓட்டு விழுந்தால்
"தங்க மெடல் நிச்சயம்."

===================================================

எழுதியவர் : ருத்ரா (3-Apr-17, 12:14 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 236

மேலே