காதலும் கடந்து போகும்

பிறப்பு
உறவு
கல்வி
நட்பு
வேலை

இவை போன்றுதான்
காதலும்

விரும்பினாலும் சரி
வெறுத்தாலும் சரி
கிடைத்தாலும் சரி
தடுத்தாலும் சரி

நிச்சயம்
வாழ்க்கை பயணங்களில்
காதலும் கடந்து போகும்

நெருங்கும் வரை
ஏக்கமாய்
கடந்த பின்பு
அனுபவமாய்

எழுதியவர் : ந.சத்யா (3-Apr-17, 8:36 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 285

மேலே