வழித்தடம் மறந்த நதிகள்
பாரதிதாசன் போட்டியாளர்
வழித்தடம் மறந்த நதிகள்
வழித்தடம் மறந்த நதிகள்
வழிதனை மறிக்கும் வீடுகள்
நதியெல்லாம் வீடாகி நிற்க
நதிகளோ மறந்த வழிகளை !!!
ஏரியில் கட்டிய வீடுகள்
எழுந்து நிற்கும் கட்டிடங்கள்
மாரியின் வரவால் மாண்டது
மக்களை உணரச் செய்ததது .
பாதையை மறிக்கும் வீடுகள்
பாதையைத் தேடும் மழைநீர் .
சோதனைத் தந்ததும் யாரோ ?
சுகமின்றி நிற்பதும் யாரோ ?
நீரின் ஓட்டத்தை நிறுத்த முடியுமா ?
நீதிக்குப் புறம்பான செயலன்றோ இது ?
ஊரும் உலகமும் தெரிந்து கொள்ள
உண்மையை உரைத்தது மழைவெள்ளம்
குடியிருந்த வீடும் போச்சு .
கூண்டோடு ஊரும் போச்சு .
சுற்றி நின்ற சுற்றம் போச்சு .
சுகம் தந்த செல்வம் போச்சு .
மழை வெள்ளம் தந்ததுவே
மனமெங்கும் துயரத்தை மக்களுக்கு .
அழக் கூட நேரமில்லை இங்கே
அவதியுறும் மக்களினம் கண்ணீரில் .
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்