விதிக்கு வித்திட்ட விவசாயி

பரமபதம் விளையாட அழைக்கின்றான் பலராமன்
பகடை உருட்ட உதவிடுவானா சகுணி..?

தென்றல்வழி தூது அனுப்புகிறாள் இந்திரலோகத்து இளவரசி
வழித்துணைக்கு வாலிவந்து வரம்கிட்டும்வரை உதவிடுவாரா...?

மண்பானையில் சமைத்த சோற்றில் மல்லிகையின் நறுமணம்வீச
மண்குலைந்த நாற்றுச் சேற்றில் எனக்கு மன்மதன் என்ற நினைப்புதான்...

காலையில் நிலவை துரத்திய சூரியனே
மாலையில் நிலவைக் கண்டு அஞ்சி ஓட்டமெடுக்க...

வேடிக்கை மட்டும்தான் பார்க்கமுடியும்
வேறென்ன மாறாய் நிகழும் இப்புவிதனில்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (3-Apr-17, 7:50 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 72

மேலே