நிரந்தரத் தீர்வையே நாடு என் தோழா

எத்தனை பெரிய இராஜ்ஜியங்களுக்கு அரசராய் இருந்தாலும்
நானென்பவன் பூஜ்ஜியமென்று உணராத வரை பூஜ்ஜியமாய் தானிருக்கும் திறமையாவும்...
தலைக்கணமே விரித்தாட அன்பென்னும் நெறி மறந்து, வீரமென்றெண்ணியே அடுத்தவர் இராஜ்ஜியத்தைக் கவர ஆசை கொண்டு கவணில் நாணேற்றி உதிரம் சிந்த பல உத்தமர்களின் உயிர் குடித்தோன்,
தன்னுயிர் குடிக்கக் காலனவன் நெருங்குகையிலே, கோழையாய் கண்ணில் நீர்வழிய எழுப்புகிறானே கதறலொளி....

பொதுவுடைமை மறந்து,
தன்னுடைமையை வளர்த்துக் கொண்டே செல்கிறோம் அல்லவா?
அதோட எதிரொளியாய் காலம் தரும் பதில்,
முடிவில்லா இயற்கையும் தன் முடிவை தேட, இயற்கையை நம்பியே வாழும் நாமும் முடிவை எய்தத் தயாராகும்
குற்றம் புரிந்தவன் வாழ்வில் நிம்மதி கொள்வதென்பதேது என்பதை உணர்ந்தே....

அசுத்தமாகின்ற இடத்தைச் சுத்தாமாக்கிவிட எண்ணினால்,
அசுத்தத்தை அகற்றுவதோடு அதன் மூலக்காரணங்களையும் வேரோடு அழித்துவிடுதலே தெளிவு.....
இல்லாவிடில் அசுத்தத்தை அகற்றிக் கொண்டிருப்பதே நம் வேலையாகிவிடும்...
நமது உள்ளமும் அது போலே....
புரிந்து கொண்டால் யாவும் உள்ளங்கைக் கனி போலே....

சிந்தனை தெளியட்டும் என் தோழா...
சமூகப் பிரச்சனைகளின் நிரந்தரத் தீர்வையே நாடு என் தோழா....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Apr-17, 5:41 pm)
பார்வை : 1460

மேலே